Monday 16 March 2015

மின் ஊழியர்களுக்கான புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும் திருப்பூர் கிளை மாநாட்டில் தீர்மானம்

திருப்பூர்,
மின் ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதை கைவிட வேண்டும் என்று திருப்பூர் கிளை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
திருப்பூர் கிளை மாநாடு
logo
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திருப்பூர் கிளை மாநாடு திருப்பூர் சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. மாநாட்டுக்கு திருப்பூர் கிளை தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். கோவை மண்டல தலைவர் மதுசூதனன் தொடங்கி வைத்து பேசினார். திருப்பூர் கிளை செயலாளர் கோபாலகிருஷ்ணன் செயலாளர் அறிக்கையை வாசித்தார். வரவு–செலவு அறிக்கையை பொருளாளர் ராமலிங்கம் படித்தார்.
பொறியாளர் அமைப்பின் பொதுச்செயலாளர் அருட்செல்வன், ஓய்வு பெற்றோர் நல அலுவலர் சங்கத்தின் அச்சுதன், சி.ஐ.டி.யு. திருப்பூர் மாவட்ட செயலாளர் சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் கோரிக்கைகள் குறித்து பேசினார். முடிவில் அவினாசி செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
புதிய பென்சன் திட்டம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
மின் உற்பத்தி திட்ட பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். மின்சார சட்டம் 2003–ல் திருத்தம் கொண்டு வர வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதை கைவிட வேண்டும். புதிய அலுவலகங்களில் அனைத்து பிரிவுகளுக்கும் பகுதி நேர பணியாளர்களை நியமிக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் திருப்பூர், அவினாசி, காங்கயம், பல்லடம், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த அனைத்து மின் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.