Wednesday 17 July 2013

புதிய பென்சன் திட்டம் கைவிட கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர், : புதிய பென்சன் திட்டத்தை விட்டு பழைய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு கரூர் கிளை சார்பில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த கிளை தலைவர் தனபால் பேசியதாவது: மின்வாரியத்தில் பணியாற்றும் மஸ்து£ர்களை கள உதவியாளர்களாக பதவி உயர்வு செய்ய வேண்டும். ஐடிஐ கள உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். 5வருட பணி என்ற நிபந்தனையை கைவிடவேண்டும். கள உதவியாளர்கள் பயிற்சி காலத்தை ஒரே சீராக அமைக்க வேண்டும். கணக்கீட்டாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. கணக்கீட்டுப் பிரிவில் வேலைப்பளுவிற்கு அப்பாற்பட்ட வேலையை செய்ய நிர்பந்தம் செய்கின்றனர். பகுதி நேர பணியாளர்களின் காலிபணியிடங்களை நிரப்பி சம்பள உயர்வு வழங்க வேண்டும். விஸ்தரிப்பு பணிகளை செய்ய கட்டுமானப் தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டும். துணை மின்நிலையங்களுக்கு இயக்குனர் பணியிடம் நிரப்பப்படாமல் இருக்கிறது. நிரந்தர தன்மையுள்ள வேலைகளை செய்யும் ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கிளை செயலாளர் குமரேசன், முன்னாள் மாநில துணைத்தலைவர் கந்தசாமி, துணைசெயலாளர் ராமமூர்த்தி, ராமகிருஷ்ணன், சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிளை பொருளாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.