Thursday, 20 December 2012

தீக்கதிர் நாளிதழுக்கு 322 சந்தாக்களுக்கான தொகையை எஸ்.எஸ்.சுப்பிரமணியன் வழங்கினார்.

கோவையில் நடந்த தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 14 வது மாநில மாநாட்டில் தீக்கதிர் நாளிதழுக்கு 322 சந்தாக்களுக்கான தொகையை சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் அ.சவுந்தரராசன் எம்.எல்.ஏ விடம் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் வழங்கினா. உடன் மத்திய அமைப்பின் நிர்வாகிகள் உள்ளனர்

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) 14வது மாநில மாநாடு!


புதிய நிர்வாகிகள் தேர்வு
மாநாட்டில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத்தலைவராக கே.விஜயன், மாநில பொதுச்செயலாளராக எஸ்.எஸ்.சுப்பிரமணியன், மாநிலப்பொருளாளராக ஈ.அந்தோணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் மாநில துணைப்பொதுச் செயலாளர்களாக எம்.வெங்கடேசன், எஸ்.ராஜேந்திரன், வீ.இளங்கோ, கே.ரவிச்சந்திரன், துணைத்தலைவர்களாக, ஆர்.கருமலையான், ஆர்.குருவேல், வை.பாலசுப்பிரமணியம், டி.அறிவழகன், எச்.ஜான் சவுந்தரராஜன், ஜி.மோகன்ராஜ், எஸ்.ஆனந்தன், பி.கே.சிவக்குமார், ஐ.எம்.ஆர்.கணேசன், ஜி.ராமகிருஷ்ணன், ஆர்.ரவிக்குமார், கே.அம்பிகாவதி, டி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். செயலாளர்களாக து.கோவிந்தராஜூ, ஆர்.ஸ்ரீதர், ஆர்.சிவராஜ், எ.பழனி, எம்.தனலட்சுமி, கே.அருள்செல்வன், வி.மதுசூதனன், எம்.பன்னீர்செல்வம், சி.ஜோதிமணி, டி.ஜெய்சங்கர், எஸ்.வண்ணமுத்து, டி.பழனிவேல், டி.ஸ்ரீதர் மற்றும் ஏ.வீரண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டின் நிறைவில் மாநில துணைப்பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் நன்றி கூறினார்.
மின் ஊழியர் எழுச்சிப்பேரணி...
கோவையில் நடந்த தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 14 வது மாநில மாநாட்டின் நிறைவாக ஆயிரக்கணக்கான மின் ஊழியர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது. பேரணியின் முகப்பில் அணிவகுத்த தலைவர்கள்.

Monday, 17 December 2012

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் வினோதினிக்கு தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பின் மாநில மாநாட்டில் பிரதி நிதிகள் சார்பில் ரூ.60 ஆயி ரத்து 250 மருத்துவ நிதி யுதவி அளித்தனர்.


ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் வினோதினிக்கு ரூ.60 ஆயிரம் நிதி உதவி


சமீபத்தில் புதுச்சேரி காரைக்காலில் வினோதினி என்ற இளம் பெண் ஆசிட் வீச்சில் உருக்குலைந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மருத்துவ உதவிக் காக அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பின் மாநில மாநாட்டில் பிரதி நிதிகள் சார்பில் ரூ.60 ஆயி ரத்து 250 மருத்துவ நிதி யுதவி அளித்தனர்.கோவையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப் பின் 14-வது மாநில மாநாடு நடந்து வருகிறது. ஞாயிறு அன்று இம்மாநாட்டை பி.சுகந்தி வாழ்த்தி பேசி னார். அப்போது அவர் அழ கான இளம் பெண் வினோ தினி காதலை ஏற்றுக் கொள் ளவில்லை என்பதற்காக கொடூரமாக ஆசிட் வீசப் பட்டு உருக்குலைந்து விட் டார். அவரது தந்தை சாதா ரண கட்டிட வாட்ச்மென். வினோதினிக்கு 3 முறை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. இதற்கு ரூ.9 லட்சம் செலவா கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.மாதர் சங்கத்தின் சார் பில் புதுச்சேரி அரசிடம் மருத்துவ உதவி வேண்டி முறையிட்டோம். அந்த அரசு ரூ
.1.5 லட்சம் தருவதாக அறிவித்துள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடமும் நேரில் கோரிக்கை வைத்துள்ளேம்.

முகம், காது, கண்கள், உருக் குலைந்த நிலையிலும் மன உறுதி தளராமல் போராடும் வினோதினிக்கு மாநாட்டுப் பிரதிநிதிகள் இயன்ற நிதி தாருங்கள் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.உடனே பிரதிநிதிகள் ரூ.100, ரூ.500, ரூ.1000 என தாராளமாக நிதி அளித்த னர். இவ்வாறு சேர்ந்த ரூ.60 ஆயிரத்து 250-ஐ மத்திய அமைப்பு மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிர மணியன், பி.சுகந்தியிடம் மேடையில் வழங்கினார். சிஐடியு மாநிலதுணைப் பொதுச் செயலாளர் ஆர். கருமலையான், மத்திய அமைப்பின் மாநிலத் தலை வர் கே.விஜயன் உள்ளிட்ட நிர்வாகிகள் நிதியளித்த பிரதிநிதிகளை உணர்ச்சிப் பொங்க பாராட்டினர்.மேலும் இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பு தலைவர் கே.ஓ.ஹபீப், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன், உழைக் கும் பெண் கள் ஒருங்கிணைப்பு அமைப்பாளர் மாலதி சிட்டிபாபு, அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செய லாளர் ஏ.பி. அன்பழகன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர்.