Showing posts with label COTEE. Show all posts
Showing posts with label COTEE. Show all posts

Wednesday, 23 September 2015

மின்துறை 108-க்காக காத்திருக்கும் ‘110’ அறிவிப்புகள்

எஸ்.எஸ்.சுப்ரமணியம், பொதுச் செயலாளர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)

“மின்மிகை மாநிலம்” “மின்வெட்டே இல்லை” , ‘மின்சார வெட்டு உள்ளதா என்பதை தொட்டுப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்’ என்கிற வாயளப்புகள் தமிழக சட்டமன்றத்திற்குள் காதை செவிடாக்கும் வகையில் தெறித்து விழுகின்றன. எப்படி மின்மிகை மாநிலமானது? மின்வெட்டு எப்படி அம்மாவின் ஆட்சி வந்ததும் “அடுத்த மாநிலத்திற்கு ஓடிப்போனது” என்று தேடினோம். அம்மாவின் அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைக்கு வந்து விட்டதோ என்ற ஆச்சரியமும் எழுந்தது.
அறிவிப்புகள்
110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்த மின்திட்டங்களைப் பட்டியலிட்டோம். 29-3-2012-ல் 5 திட்டங்களை அறிவித்துள்ளார். 3-4-2013ல் ஒரு திட்டத்தையும், 25-4-2013ல் 2 திட்டங்களையும் மொத்தமாக 8 திட்டங்களை அறிவித்துள்ளார். இவற்றின் மொத்த நிறுவுதிறன் 8,500 மெகாவாட்.இந்த நிறுவு திறனில் 1 மெகா வாட் உற்பத்தி கூட இதுவரையிலும் நடக்கவில்லை என்பதும் ஒருவேளை அசுரகதியில் இனிமேல் பணிகள் நடைபெற்றால் கூட 2017-க்கு முன்னர் இந்த திட்டங்களின் மூலம் “ஒரு யூனிட் மின்சாரம் கூட கிடைக்கப்போவதில்லை” என்பதும் ஒருமுறை சொன்னாலும் 110 சதவிகித உண்மை.
29-3-2012-ல் அறிவித்த5 திட்டங்கள்1.
திரவ எரிவாயுவைப் பயன்படுத்தி 500 மெகாவாட் தயாரிக்கும் திட்டம்; எரிவாயு குழாயே பதிக்கப்படவில்லை.2. எண்ணூர் அனல் மின்நிலையம் விரிவாக்கம் : 600 மெகாவாட்டிற்கு 3-6-2009ல் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதை 660 என்று மாற்றியதால் 24-1-2013ல்தான் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று ஆரம்பக்கட்ட நிலையில் உள்ளது.3. உடன்குடி விரிவாக்கத் திட்டம் : எண்ணூரில் நிறுவு திறனைஅதிகரித்ததால் மீண்டும் சுற்றுச்சூழல் அனுமதி, இங்கு நிறுவு திறனை (2ஒ800 மெகாவாட் என்பதை 2ஒ660 மெகாவாட் என) குறைத்ததால் 14-10-2013ல் கிடைத்த சுற்றுச்சூழல் அனுமதி செல்லாது என்பதால் மீண்டும் அனுமதி கோரப்பட்டிருக்கிறது. ஏன் ஒரிடத்தில் குறைக்கிறார்கள், இன்னொரு இடத்தில் கூட்டுகிறார்கள், அம்மாவிற்கே வெளிச்சம்.4. எண்ணூர் பழைய மின்நிலையத்தை மாற்றும் திட்டம்:சுற்றுச்சூழல் அனுமதி பெற முயற்சிகள் நடைபெறுகின்றன.5. 1600 மெகாவாட் உப்பூர் திட்டம் : நிலம் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. தூத்துக்குடியில் இருந்துதான் ரயில் மூலம் நிலக்கரி கொண்டு வர வேண்டும், யார் கூறினாலும் 2015-16ல் வரும் வாய்ப்பே இல்லை.இதர திட்டங்களுக்கும் இதே கதிதான். பேனைப் பெருமாளாக்கினார் என்பார்கள். இல்லாத ஒன்றை இமயமலை என்று சொல்ல அதிமுக அரசால் முடிகிறது.
சூரிய ஒளி மூலம் சக்தியா? இருளா?
சூரிய ஒளி மூலம் 3000 மெகாவாட் வந்து பாயுமென்றார்கள். அதில் 10 சதம் என்றால் கூட 300 மெகாவாட் 5 சதவிகிதம் என்றால் கூட 150 மெகாவாட். இதுவரை 107.2 மெகாவாட் உற்பத்தி நடைபெற்றுள்ளது. 5 சதவிகித அரசு என்றால், கோபம் வரும், வேறு. விஷயங்களில் சதவிகிதம் 2 இலக்கத்திற்கு மேல் என்கிறார்கள்.
தொலைநோக்கு திட்டத்தை பின்னோக்கிப் பார்த்தால்
தொலைநோக்கு திட்டம் 2023ல் மார்ச் 2012ல் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். 2023ல் 15 லட்சம் கோடி வரும். இதில் 4.5 லட்சம் கோடி மின்சாரத் திட்டங்கள் மூலமே வரும் என்றார். 2023க்குள் உற்பத்தியாக வேண்டிய 20,000 மெகாவாட் மின்சாரத்தில் 5000 மெகாவாட் 2017க்குள் வந்துவிடும் என்றார்கள். ஒருவேளை கூரையைப் பொத்துக் கொண்டு வந்தால் மட்டுமே சாத்தியம் எதுவுமே இல்லாமல் இருப்பதற்கு ஏதாவது சொல்லி வைத்தாரே மகராசி என்று வேண்டுமானால் பாராட்டலாம்.
ரூ.331.54 கோடி வந்துச்சா? வரலயா?
பிள்ளைப் பெருமாள் நல்லூரில் (ஞஞசூ) உள்ள தனியார் மின் உற்பத்தி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும்விநியோகக் கழகம் (கூஹசூழுநுனுஊடீ) மின் கொள்முதல் ஒப்பந்தம் ஒன்றை 1997ல் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தம் ஏப்ரல் 2001 முதல் 30 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் இந்த நிறுவனம் இயற்கை எரிவாயுவை எரிபொருளாக பயன்படுத்துகிறது. வாயுகிடைக்காதபோது நாஃப்தாவை பயன்படுத்தும். நாஃப்தாவிற்கு ஆகும் செலவை நிறுவனம் ஓராண்டிற்குள் கூஹசூழுநுனுஊடீவிடம் கேட்டுப் பெற வேண்டும். இது ஒப்பந்த ஷரத்து. இனி என்ன நடந்தது என்பதை சிஏஜி வார்த்தைகளில் கேட்கலாம்.“ஞஞசூ நிறுவனம் 2001-02 முதல் 2009-10 வரையிலான கணக்கை2011 வரையிலும், 2010-11 வரையிலான கணக்கை 2011 செப்டம்பரிலும் சமர்ப்பித்தது.”இதன் தொடர்பாக எங்கள் கருத்து;ஞஞசூ நிறுவனம் ஓராண்டிற்குள் கணக்கு சமர்ப்பித்து கூடுதல் பணம் எவ்வளவு என்று கோரவில்லை.2006-07 முதல் 2010-11 வரையிலான காலத்தில் உண்மையில் பயன்படுத்தப்பட்ட நாஃப்தா 11,20,634 மெட்ரிக் டன்கள். ஆனால் ஞஞசூ கோரியபடி 12,01,569 மெட்ரிக் டன்கள் நாஃப்தாவிற்கு கூஹசூழுநுனுஊடீ பணம் கொடுத்துள்ளது. இப்படி பயன்படுத்தாத 80,935 மெட்ரிக் டன் நாஃப்தாவுக்கு கூஹசூழுநுனுஊடீகூடுதலாக கொடுத்த தொகை ரூ.331.54 கோடி.இதுதான் வழக்கம் என்று ஞஞசூ நிறுவனம் கூறுகிறது. ஆனால், ஒப்பந்தப்படி இது கூடுதல் தொகை. இதுகுறித்து 2012 ஆகஸ்டில் அரசிடம் கேட்டிருந்தோம். 2012 டிசம்பர் வரை பதிலில்லை.(15.5.2013 அன்று சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட சிஏஜி அறிக்கை பக்-88-89)அதன் பிறகேனும் ஏதாவது நடந்ததா?
ரூ.254 கோடி இழப்பு முடிந்ததா? தொடர்கிறதா?
2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கூஹசூழுநுனுஊடீ வேண்டுகோளின்படி தமிழக அரசு ஓர் ஆணை வெளியிட்டது. தமிழகத்தில் தனியார்உற்பத்தி செய்யும் மின்சாரம் முழுவதும் கூஹசூழுநுனுஊடீ-விற்கு அல்லது தமிழகத்தில் உயர்அழுத்த மின்சாரம் உபயோகிக்கும் நிறுவனங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் உள்ளது. இதனடிப்படையில் தனியார் நிறுவனங்களுடன் கூஹசூழுநுனுஊடீ ஒப்பந்தமும் செய்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.3.836-க்கு என்று கொள்முதல் செய்து வந்தது.திடீரென ஆகஸ்ட் 2010ல் ரிலையன்ஸ் எனர்ஜி ட்ரேடிங் லிமிடெட், பவர் டிரேடிங் கதரப்பரேஷன்,இந்தியா லிமிடெட் மற்றும் டாடா பவர் டிரேடிங் கம்பெனி லிமிடெட் ஆகியோருடன் கூஹசூழுநுனுஊடீ மின்சார கொள்முதல் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதேநேரம் தமிழக தனியார் உற்பத்தியாளர்களிடம் செய்து கொண்ட மின்கொள்முதல் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்தது. இந்த நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்த மின்சாரத்தை பவர் டிரேடிங் மற்றும் டாடா நிறுவனத்திற்கு விற்றனர். இந்த இரண்டு நிறுவனங்களிடமிருந்தும் தமிழ்நாடு மின்சார வாரியம் வாங்கிய மொத்த மின்சார அளவான 189.4 கோடி யூனிட்டில் 158.7 கோடி யூனிட் தமிழக தனியார் நிறுவனங்கள் உற்பத்திசெய்தது. நேரடி கொள்முதலில் ஒரு யூனிட்டை ரூ.3.836க்கு வாங்கிய மின்சாரத்தை மேற்கண்ட இரண்டு கம்பெனிகளிடமிருந்து ரூ.4.74 முதல் ரூ.6.75 வரை வாங்கினார்கள். இதனால் வாரியத்திற்கு இழப்பு ரூ.254.05 கோடி (12-8-2014ல் சட்டமன்றத்தில் வைக்கப் பட்ட ஊஹழு அறிக்கை பக். 52-53)
விவசாயிகளுக்கு மின் இணைப்பு: சொல்லுவோம் ஆனா..?
தமிழகம் முழுவதும் 2003 வரை விவசாய மின் இணைப்பு கோரி 4,23,596 விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர். 31.3.2014 வரைதயார் நிலையில் உள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 47,728 ஆகும். விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கிட அரசாங்கம் ஆண்டுதோறும் நிர்ணயிக்கும் இலக்கு என்பது 40,000 ஆகும். ஆனால், 1.4.2014 முதல் 31.12.2014 வரை வழங்கியுள்ள மின் இணைப்புகளோ 5,124 மட்டுமே.
Thanks to Theekkathir

Sunday, 16 March 2014

பொதுத்துறை பாதுகாத்திட... இடதுசாரி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வோம்..!

பொதுத்துறை பாதுகாத்திட... 
இடதுசாரி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வோம்..!
மின் ஊழியர் மத்திய அமைப்பு அறைகூவல்...!!

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) இரண்டுநாள் பொதுக்குழு கூட்டம் நெல்லையில் மார்ச் 15, 16 தேதிகளில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைப்பின் தலைவர் கே.விஜயன், பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், பொருளாளர் ஈ.அந்தோணி, துணைப் பொதுச் செயலாளர்கள் கே.ரவிச்சந்திரன், எஸ்.ராஜேந்திரன், எம்.வெங்கடேசன் மற்றும் 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இப்பொதுக்குழுவை சிஐடியு மாநிலத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவரான அ.சவுந்தரராசன் துவக்கி வைத்துஉரையாற்றினார்.

Saturday, 1 February 2014

COTEE Wage revision Donation Letter copy

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION
CORPORATION LIMITED

    SECRETARIAT BRANCH,
                                                            N.P.K.R.R. MAALIGAI, 
                                                      144, ANNA SALAI, 
                                                CHENNAI – 2.


Memorandum No.3993/ A3 / A31 /14 –1,   Dated  : 31-1-2014.

                             Sub: TANGEDCO  - Contribution of donation to Trade
                                     Union - Deduction of donation from the salary of
                                     the willing Members of Central Organisation of
                                     Tamil Nadu Electricity Employees - Orders -    
                                     Issued.

Friday, 13 December 2013

பராமரிப்பு தனியாருக்கு விட திட்டம் மேட்டூர் தெர்மல் ஊழியர்கள் கலக்கம்


 மேட்டூர் தெர்மல் கன்வேயர் பராமரிப்பு மற்றும் நிலக்கரி கையாளும் பகுதியை தனியாருக்கு டெண்டர் விட முடிவு செய்துள்ளதால், அப்பகுதியில் பணிபுரியும், 40 சதவீத ஊழியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேட்டூர் தெர்மலில் (அனல்மின் நிலையம்) ஒரு யூனிட்டில், 210 மெகாவாட் வீதம், நான்கு யூனிட்களில், 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக நாள் ஒன்றுக்கு, 14,000 டன் நிலக்கரி எரிக்கப்படுகிறது.
மேட்டூர் தெர்மலுக்கு தினமும் சராசரியாக, ஏழு சரக்கு ரயில்களில் நிலக்கரி வருகிறது. நிலக்கரி இறக்கும் பகுதி, நிலக்கரியை மின் உற்பத்திக்காக அனுப்பி வைக்கும் பிரைமரி கிரசர், செகன்ட்ரி கிரசர், லோக்கோ, ஸ்டேக்கர், ரீ கிளைமர், டிப்ளர்கள் உள்ளது.
கிரசரில் இருந்து பாய்லருக்கு நிலக்கரி எடுத்து செல்லும் கன்வேயர் பெல்ட் பகுதி மற்றும் நிலக்கரி கையாளுதல் பகுதியில் ஒரு கண்காணிப்பு பொறியாளர், இரு செயற்பொறியாளர், 80 உதவி மற்றும் இளநிலை பொறியாளர், ஹெல்பர், ஆபரேட்டர் உள்பட, 600 ஊழியர்கள் பணி புரிகின்றனர்.தெர்மலின் மொத்த ஊழியர்களில், 40 சதவீதம் பேர் இப்பகுதியில் வேலை செய்வது குறிப்பிடத்தக்கது. மேட்டூர் தெர்மலில், 2012 மே, 10ம் தேதி நடந்த தீ விபத்தில், 160 மீட்டர் நீளமுள்ள நிலக்கரி கன்வேயர் பெல்ட் எரிந்து சேதமானதால், 10 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டமும், 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டது.இதனால், நிலக்கரி கையாளுதல் மற்றும் கன்வேயர் பராமரிப்பு பணி அனைத்தையும் மொத்தமாக ஒரே தனியார் நிறுவனத்துக்கு, 100 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட மின்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் இம்மாத இறுதியில் நடக்க உள்ளது.இதற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து மேட்டூரில் மின்ஊழியர்கள் மத்தியில் நோட்டீஸ் வினியோகம் செய்கிறது. மேலும், கன்வேயர் பராமரிப்பு தனியாருக்கு விடுவது, தெர்மல் மின் ஊழியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த, 25 ஆண்டாக நிரந்தர ஊழியர்கள் வேலை செய்த மேட்டூர் தெர்மலின் பல்வேறு பிரிவுகளில், தற்போது ஒப்பந்த ஊழியர்கள் மூலம் இயக்கப்படுகிறது. ஒப்பந்த ஊழியர்களை நியமிப்பதிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.இந்நிலையில், மேட்டூர் தெர்மலில், 40 சதவீதம் ஊழியர்கள் பணிபுரியும் நிலக்கரி கையாளும் பகுதி, கன்வேயர் பெல்ட் பகுதியை தனியாருக்கு விட மின்கழகம் முடிவு செய்துள்ளது. இதனால், அப்பகுதியில் பணிபுரியும், 40 சதவீத ஊழியர்கள் வேறு தெர்மலுக்கு மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது.
ஒப்பந்த தொழிலாளர் நியமனத்தால் தெர்மலில் உள்ள, 40 சதவீத பணியிடங்கள் ரத்து செய்யவும் வாய்ப்புள்ளது. இதனால், மேட்டூர் தெர்மல் ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். எனவே, தெர்மல் கன்வேயர் பராமரிப்பை தனியாருக்கு விடும் முடிவை மின்கழகம் ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Friday, 5 April 2013

கூட்டுறவு சங்க தேர்தல் சிஐடியு கண்டனம்


சென்னை: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) பொது செயலாளர் எஸ்.எஸ். சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கை: 

கடந்த 29ம் தேதி திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் ஆகிய இடங்களில் கூட்டுறவு நாணய சங்கத்திற்கு வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டது. திருப்பூரில் 37, சங்கராபுரத்தில் 11 வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டு அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டது. ஆனால், சில மணிநேரத்தில் அங்குள்ள அமைச்சர்களின் தலையீடு காரணமாக 2 இடங்களிலும் அதிமுகவை சார்ந்த வேட்பு மனுக்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அறிவிப்பு வெளியிட்டனர். இதை எதிர்த்து எங்கள் அமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம். அதன் அடிப்படையில் வழக்கை விசாரித்த நீதிமன்றமும் விசாரணைக்கு எடுத்து கொண்டு தேர்தலை வரும் 16ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.  இந்த 2 இடங்களில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக அமைச்சர்கள் கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடுகளை செய்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Sunday, 31 March 2013

தமிழ்நாடு மின்சாரவாரிய திருப்பூர் கோட்டகூட்டுறவு சங்க தேர்தல்


பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் 
சங்கம் எண் CP 114 தேர்தல் வேட்பு மனு தாக்கல்  
இன்று 29.03.2103 வெள்ளியன்று நடை பெற்றது.

அதில் ஐக்கிய சங்கம் (TPAS) ,பாரதிய மஸ்தூர் 
சங்கம்(BMS) , மத்திய  அமைப்பு (CITU ) 
தொ.மு.ச (TMTM ) பொறியாளர்கள்  சார்பாக
உறுப்பினர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். 

Thursday, 21 February 2013

தொழிற்சங்கம் ஸ்டிரைக் எதிரொலி : 8 கோடி மின் கட்டண வசூல் பாதிப்பு

சென்னை: தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டத்தால், தமிழகத்தில் சுமார் ரூ.8 கோடிக்கு மின்கட்டணம் வசூலிக்கும் பணி பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ் மொத்தம் 1.64 கோடி வீட்டு இணைப்புகள் உள்ளன. மின் பயன்பாட்டு அளவு கணக்கீடு செய்து முடித்தவுடன், அடுத்த 20 நாட்களில் மின்கட்டணத்தை செலுத்த வேண்டும். அப்படி செலுத்த தவறினால், மின் இணைப்பு துண்டிக்கப்படும் அல்லது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு மறு இணைப்பு தரப்படும்.  மின்கட்டண மையங்கள், வங்கிகள், தபால் நிலையங்கள், இணையதளம் ஆகியவை மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இருப்பினும், மின்கட்டண மையங்களில் கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது. 

இந்நிலையில், சிஐடியு, தொமுச உள்பட 11 மத்திய தொழிற்சங்கங்கள் கடந்த 2 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதில் மின்ஊழியர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதனால், மின்கட்டண மையங்களில் பணம் வசூலிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் கூறுகையில், தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மின்கட்டண வசூல் மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் மூலம் தினமும் ரூ.20 கோடிக்கு வசூலாகும். முதல்நாள் வேலைநிறுத்த போராட்டத்தால் 60 சதவீத மின்கட்டண வசூல் மையங்கள் மூடி இருந்தன. இதனால், ரூ.8 கோடிக்கு மின்கட்டணம் வசூலிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.