Friday 11 July 2014

மின்வாரியம் : கணக்கீட்டு அதிகாரிகளிடம் பாரபட்சம் எஸ்.எஸ். சுப்பிரமணியன் - தீக்கதிர்

மின்வாரியத்தில் செயல்படும் மின் ஊழியர் மத்திய அமைப்பு, மின் வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் உரிமைக்கு குரல் கொடுக்கும் அமைப்பாக மட்டும் அல்லாமல் அதிகாரிகளின் அவல நிலைகளை நிவர்த்தி செய்யும் அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில்தான் வாரியத்தில் பணியாற்றும் பொறிஞர்களை ஸ்தாபனப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.இவைகளின் பின்னணியில் மின்வாரிய கணக்கீட்டுப் பிரிவில் பணிபுரிகின்ற உதவி கணக்கீட்டு அதிகாரிகள் தாங்கள் அதிகாரிகளாக பயன்படுத்தப்படவில்லை என்ற கவலையோடு மின் ஊழியர் மத்திய அமைப்பை நாடி உள்ளனர்.
அதன் அடிப்படையில் தான் வாரியத்தில் பணியாற்றும் உதவி கணக்கீட்டு அதிகாரிகளை அழைப்பது, குறைகளை பகிர்ந்து கொள்வது, நிவர்த்திக்க நடவடிக்கை எடுப்பது என்ற அடிப்படையில் 6.7.2014 அன்று உதவி கணக்கீட்டு அதிகாரிகளின் கூட்டத்தை மின் ஊழியர் மத்திய அமைப்பு நடத்தி குறைகளையும், கோரிக்கைகளையும் அடையாளங்கண்டு வரிசைப்படுத்தி உள்ளது. 21 மின் வட்டங்களிலிருந்து 45 உதவி கணக்கீட்டு அதிகாரிகள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு மின் எரிப்பு கணக்கீடு, வாரியத்தின் வருவாயை உத்தரவாதப்படுத்தி உயர்த்துவது என்ற பணிகளில் ஈடுபட்டு இருக்கும் எங்களை பச்சை மையை பயன்படுத்தி கையெழுத்திடலாம் என்ற உரிமையை தந்து, எழுது பொருளை விநியோகம் செய்யும் அலுவலக உதவியாளரைப் போல பயன்படுத்துவதாக கண்ணீர் மல்க தங்களது குறைகளை முன் வைத்து, வாரியம் எங்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பு போன்றவைகளை பரிசீலிப்பது போன்றது ஒரு புறமானாலும், கணக்கீட்டுப் பணியின் பல்வேறு பணிகளை மேற்பார்வையிட்டு ஒழுகுகின்ற வருவாயை தடுத்தாலே மின் வாரியத்தின் வருவாய் சிறிது கூடுதலாவதற்கு உதவும் என்ற ஆலோசனையை முன் வைத்தனர்.

மின் எரிப்பு கணக்கீடு, பண வசூல், அதில் ஏற்படும் தவறுகள், குளறுபடிகள் அவைகளை எங்களால் தான் தீர்க்க முடியும் என்ற வாதத்தை வலிமையாக முன் வைத்தனர். எங்களது பணியை எங்களால் தான் முடியும் என்ற வாதத்தை வலிமையாக முன் வைத்தனர். எங்களது பணியை மேற்பார்வையிடும் வருவாய் பிரிவில் எங்களைப் போன்ற உதவி கணக்கீட்டு அதிகாரிகளின் மேலாண்மையில் செயல்படுவது என்பது தான் முறையான செயல்பாடாக இருக்கும் என்று சரியாகவே குறிப்பிட்டனர். அதிகாரிகள் என்று அறிவித்து தனியான அறையோ, கணினியோ, ஈமெயில் ஐடியோ எதுவும் வழங்காமல் நடை பிணமாக எங்களை பயன்படுத்துகின்றனர் என்றும், எங்களது பிரிவில் 4 அடுக்கு பதவி உயர்வோடு நின்று விடுவதையும் எங்களுக்கு இணையாக பணிபுரியும் கணக்குபிரிவில் எட்டு அடுக்கு பதவி உயர்வும் வழங்குகின்ற பாரபட்சமான போக்கை எடுத்துரைத்து அதில் மாற்றம் காணும் வகையில் குறைந்த பட்சம் ஆறடுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்து ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பணியின் தன்மை, முறைப்படுத்துதல் வருவாய் ஒழுகலை அடைத்து மாற்றத்தை காணமுடியும் என்பதை உங்களிடத்தில் சொல்லியதை போலவே அதிகாரிகள் இடத்திலும் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருமானால் அவர்கள் முன் எங்களது கோரிக்கையையும், வாரிய வருமானத்தை உயர்த்த முடியும் என்ற ஆதங்கத்தையும் எங்கள் முன் வெளிப்படுத்தினர்.அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக அப்பிரிவின் இதர பகுதி ஊழியர்களும் கலந்து கொண்டு கோரிக்கைக்கு வலு சேர்த்தனர்.
அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் அக்குழுவின் கன்வீனர் தோழர் டி. கோவிந்தராஜூ தலைமை தாங்க, மண்டல செயலாளர் தோழர் எம். பன்னீர் செல்வம் வரவேற்க, குழுவின் கன்வீனர் கோவிந்தராஜ் அறிக்கையை முன்மொழிய, மாநில துணை தலைவர் தோழர் கா. ராமகிருஷ்ணன். மாநில செயற்குழு உறுப்பினர் திருவண்ணாமலை, திட்ட பொருளாளர் தோழர் பெருமாள், திருச்சி வட்ட துணை தலைவர் கணபதி, தஞ்சை வட்ட தலைவர் ஜோதி ராமன், புதுக்கோட்டை வட்ட செயலாளர் செல்வராஜ், பெரம்பலூர் வட்ட செயலாளர் அகஸ்டின், கணக்கீட்டு பிரிவு உறுப்பினர் முருகவேல், தோழர் சோமசுந்தரம் தென் சென்னை ஆகியோர் கலந்து கொண்டனர். மாநில செயலாளர் தோழர் எம். தனலட்சுமி நன்றியுரையோடு கூட்டம் நிறைவுபெற்றது.

No comments:

Post a Comment