Sunday 16 March 2014

பொதுத்துறை பாதுகாத்திட... இடதுசாரி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வோம்..!

பொதுத்துறை பாதுகாத்திட... 
இடதுசாரி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வோம்..!
மின் ஊழியர் மத்திய அமைப்பு அறைகூவல்...!!

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) இரண்டுநாள் பொதுக்குழு கூட்டம் நெல்லையில் மார்ச் 15, 16 தேதிகளில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைப்பின் தலைவர் கே.விஜயன், பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், பொருளாளர் ஈ.அந்தோணி, துணைப் பொதுச் செயலாளர்கள் கே.ரவிச்சந்திரன், எஸ்.ராஜேந்திரன், எம்.வெங்கடேசன் மற்றும் 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இப்பொதுக்குழுவை சிஐடியு மாநிலத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவரான அ.சவுந்தரராசன் துவக்கி வைத்துஉரையாற்றினார்.



கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:நவீன தாராளமயக் கொள்கை அமலாக்கம் என்ற பெயரால் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது, பொதுத்துறைகளை தனியார்மயமாக்குவது, அரசின் அனைத்துச் செயலிலும் ஊழலின் உறைவிடமாக திகழ்வது, நாட்டின் இயற்கை வளங் கள், வனங்கள், விளை நிலங்கள் அனைத்தையுமே கொள்ளைக் காடாக மாற்று வது, நாட்டு மக்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து தரமான மின்சாரத்தை தடங்கலின்றி வழங்குவதில் தோல்வி, இந்திய தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற ஓய்வூதியம் உள்ளிட்ட உரிமைகளைப் பறிப்பது:

கட்டுக்கடங்கா விலைவாசியை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காததோடு, விலைவாசி உயர்வுக்கு ஊற்றுக் கண்ணாக இருக்கும் பெட் ரோலியப் பொருட்கள் சந்தையை நிர்ணயிக்கும் என்ற கொள்கையை அமல் படுத்துவதன் மூலம் இந்திய அந்நியப் பெருமுதலாளிகளின் கொள்ளைக்கு வழிவகுக்கும் கொள்கையை காங்கிரஸ் கட்சி கடைப்பிடிக்கின்றது.இவை போன்ற மக்கள் விரோத தொழிலாளர் விரோத கொள்கையை அமலாக்குவதில் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் எந்தவித வித்தியாசமும் கிடையாது. தொழிலாளிகளை வஞ்சிக்கும் சட்டங்களையும், உத்தரவுகளையும் நிறைவேற்றுவதில் இவர்கள் இருவரும் ஒரு வருக்கு ஒருவர் உதவி செய்தே வருகின்றனர்.

கவே வரவிருக்கின்ற மக்கள வைத் தேர்தலில் இக்கட்சிகளை தோற்கடிக்க வேண்டியது மின்சாரத் தொழி லாளர்களின் வர்க்கக் கடமையாகும்.இதே காலத்தில் இந்த நாசகர நவீன தாராளமயத்திற்கு மாற்றுத் திட் டத்தை முன் வைத்து மதச்சார்பற்ற நிலையை பின்பற்றும் இடதுசாரிகள், இப்பாராளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றிபெற ஆதரவு அளித்து அனைத்துநடவடிக்கைகளிலும் ஈடுபடுவதென பொதுக்குழு ஏகமனதாக தீர்மானிக் கிறது.இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

மின்பற்றாக்குறைக்குயார் காரணம்? : 1990களுக்குப் பின் ஆண்ட அரசு கள் மின்துறையில் பின்பற்றிய கொள் கைளால் `மின்சாரச் சட்டம் 2003’ வந்த பின்பு, அதன் அடிப்படையில் மின்சாரப் பற்றாக்குறையும், மின் கட்டண உயர்வும், மின் உற்பத்தியில் தனியார் தலையீடு தலைவிரித்தாடுவதோடு இந்திய நாட்டின் வளர்ச்சியே கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் இதே நிலைதான். கடந்த 15 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட அரசுகள், மின்சார உற்பத்திக்கு கவனம் செலுத்தாததோடு, மின்உற்பத்தியில் தனியாரைச் சார்ந்துஇருந்ததினால்தான் மின்பற்றாக் குறையும், மின் கட்டண உயர்வும், தமிழகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டுள்ளது.இந்நிலையை மாற்றும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள மின் திட்டங்களை அறிவிப்பாக மட்டும் இல்லா மல், இத்திட்டங்களை போர்க்கால அடிப்படையில் முடித்து, மின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, மின்பற்றாக் குறையை போக்க போர்க்கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்தும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இப்பொதுக்குழுவில் சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகு மாறன், துணைப் பொதுச் செயலாளர் ஆர்.கருமலையான் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
Courtesy Theekkathir Tamil Daily

No comments:

Post a Comment