Monday 13 May 2013

புற்றுநோய் போல பரவும் ஒப்பந்த முறையை ஒழித்திடுக!

தீக்கதிர் கட்டுரை 
கட்டுரை :-

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலை வர் அ.சவுந்தரராசன் 


                                            சென்னை, மே 8-தொழிற்சாலைகளில் புற்றுநோய் போல் பரவும் ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும் என்றும் தொழிற்சங்க அங் கீகாரத்திற்கு மாநில அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலை வர் அ.சவுந்தரராசன் கேட்டுக்கொண்டார்.புதனன்று ( மே 8) சட்டப்பேரவையில் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப் புத்துறை மானியக்கோரிக்கை மீது நடை பெற்ற விவாதத்தில் அவர்பேசியது வருமாறு:தொழிற்சங்க அங்கீகார உரிமைகளை தொழிற்சங்கங்களின் கூட்டு பேர உரி மையை தொழிலாளர் நலவாரியம் காப் பாற்ற வேண்டும். தொழிற்சங்கத்தையே அனு மதிக்கமாட்டோம் என்பதுதான் நிறுவனங் களின் கொள்கையாக இருக்கிறது. தொழி லாளர் நலத்துறை, தொழிற்சங்கங்களோடு பேசமாட்டோம் என்று அவர்கள் பிரகட னம் செய்வது இந்த துறைக்கு அவர்கள் விடுக்கும் சவாலாக உள்ளது.தொழிலாளர் நலத்துறை அமைச் சர் சி.த. செல்லபாண்டியன்: தொழிலா ளர்கள் சங்கம் அமைப்பது என்பது அவர் களது உரிமை. ஆனால் அதை அங்கீகரிப் பதோ அல்லது அங்கீகரிக்க மறுப்பதோ அந்தந்த நிர்வாகத்தை பொறுத்தது.அ.சவுந்தரராசன்: தொழிலாளர் துறை அல்லது தொழிற்சங்கத்தோடு பேசமாட் டேன் என்று சொல்வதற்கு எந்த நிறுவனத் திற்கும் உரிமை கிடையாது. தொழிற்சங்க அங்கீகாரத்திற்கு சட்டமியற்றவேண்டும். தொழிலாளர் நலவாரியத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். ஹூண்டாய் கார் நிறுவனம் தொழிற்சங் கத்தை அங்கீகரிக்க மறுத்து 80க்கும் மேற்பட்டவர்களை பணிநீக்கம் செய்தது. இப்போதும் 20 பேர் வெளியே இருக்கிறார் கள். முதலில் சங்கம் வைத்தவர்களுக்கு இப்போது கூட கிரேட் மறுக்கப்படுகிறது. பாக்ஸ்கான், சான்மினா, நோக்கியா உள் ளிட்ட நிறுவனங்களில் 80க்கும் மேற்பட் டோர் என பழிவாங்கல் தொடருகிறது.அமைச்சர் செல்லபாண்டியன்: காஞ்சிபுரம் மாவட்ட இருங்காட்டுக் கோட்டையில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் உள்பட பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஹூண்டாய் நிறு வனத்தில் 2300 தொழிலாளர்கள் பணி புரிந்துவருகிறார்கள். ஹூண்டாய் மோட் டார் இந்தியா எம்ப்ளாயீஸ் யூனியன் மற் றும் யுனைடெடட் ஹூண்டாய் எம்ப்ளா யீஸ் யூனியன் என்ற இரண்டு தொழிற் சங்கங்கள் இயங்கி வருகின்றன. ஹூண் டாய் மோட்டார் இந்தியா எம்ப்ளாயீஸ் யூனியன் நிர்வாகத்துடன் பேச்சு நடத்தி 15 முதல் 17 விழுக்காடு வரை சம்பள உயர்வுக் கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சிஐடியு தொழிற்சங்கம் மட்டும் இந்த ஒப்பந் தத்தை எதிர்த்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது. அதன்பின்னர் தொழிலாளர் நல ஆணையர் முன்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிடவேண்டும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கையை நிர்வா கம் மேற்கொள்ளக் கூடாது எனவும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமுல் படுத்தும் படி இரு தரப்பினரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வேலை நிறுத்தம் சுமுகமாக முடிக் கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக ஆலை நிர்வாகம், தொழிற்சங் கம், தொழிலாளர் நலத்துறை கலந்து கொண்ட முத்தரப்பு கூட்டம் நடத்தப்பட் டது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடி வின் படி இந்த பிரச்சனையை தொழிலா ளர் நல நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. அதில் அந்த வழக்கு நிலுவை யில் உள்ளது.அ.சவுந்தரராசன்: அமைச்சர் சொன் னது போல் ஏற்றுகொள்ளப்பட்ட அறி வுரை அமலில் இல்லை என்பதுதான் உண்மை. பாரபட்சம் தொடர்கிறது. பழி வாங்கலும் தொடர்கிறது. வழக்கு நிலு வையில் இருக்கிறது.அமைச்சர் செல்லபாண்டியன்: கடந்த திமுக ஆட்சியில் 35 தொழிலாளர் கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அன்று உறுப்பினர் தான் ஒரு ஒப்பந்தம் போட்டு 35 பேரில் 16 பேரை மீண்டும் பணிக்கு எடுத்துக் கொண்டார்கள். 18பேர் மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டி ருந்தனர். உறுப்பினர் சவுந்தரராசனே முத் தரப்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொண் டார்.அ.சவுந்தரராசன்: ஒப்பந்தங்கள் கையெழுத்தான பிறகும் நில நேர்வுகளில் அவற்றை மறு பரிசீலனை செய்யவேண்டி யுள்ளது. அதைத்தான் நான் வலியுறுத்து கிறேன். நோக்கியாவில் 5பேர் பாக்ஸ்கா னில் மாற்றுத் திறனாளிகள் உள்பட 10பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சான்மினா உள்ளிட்ட நிறுவனங்களில் இப் போதும் வேலை நிறுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பிரச்சனை களில் எல்லாம் நிறுவனங்கள் பேச்சு வார்த்தைக்கு வரமறுக்கிறது என்பதை தான் நாங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டுவருகிறோம். இந்த பிரச்சனை யில் முதல்வர் தலையிட்டு பழிவாங்கல் களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.அமைச்சர் செல்லபாண்டியன்: 8.2.2013 அன்று சிஐடியு சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு சான் மினா தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர். 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட னர். சான்மினா தொழிலாளர் பிரச்சனை குறித்து சென்னையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் முன்பு தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சனைக்கு அரசு விரைவில் நல்ல தீர்வு காணும்.அ.சவுந்தரராசன்: தொழிற்சங்க அங் கீகாரத்திற்கு கேரளம் போல் மேற்குவங் கம் போல் தமிழ்நாட்டிலும் ஒரு சட்டம் இயற்ற வேண்டும். தொழிற்சங்கங்களின் கூட்டு பேர உரிமையை நிர்வாகங்களை ஏற்கச் செய்யவேண்டும். தொழிலாளர் களின் போராட்டங்களின் போது போடப் பட்ட வழக்குகளை திரும்பப்பெறுவதற்கு முதலமைச்சர் உதவவேண்டும்.அமைச்சர் செல்லபாண்டியன்: பன் னாட்டு நிறுவனங்களிலும் தற்போதை தொழிலாளர் சட்டங்கள் பொருந்தும். முந்தைய திமுக ஆட்சியில் நிர்வாகத் திற்கு ஆதரவான தொழிற்சங்கத்தை வளர்த்து விட்டார்கள். அதிமுக அரசு பொறுப்பேற்றபின்னர் கடந்த 22 மாதங் களில் மட்டும் 12738 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிர்வாகங்கள் மீது 4 கோடியே 88 லட்சத்து 25ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அ.சவுந்தரராசன்: குறைந்தபட்ச கூலியை நான்காண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைப்பதை கைவிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கவேண்டும். தொழிற்சாலை கள் மட்டுமல்லாமல் கல்லூரிகள் மருத் துவமனைகள், பள்ளிகள் போன்ற சேவை நிறுவனங்களிலும் அரசுப்பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் காவல் நிலையங் கள், மருத்துவமனைகளில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள துப்புரவு தொழிலா ளர்கள் அனைவரும் குறைந்த பட்ச கூலிக் கும் குறைவாகவே சம்பளம் பெறுகிறார்கள். அதை மாற்றி அமைக்கவேண்டும்.அமைச்சர் செல்லபாண்டியன்: தமி ழகத்தில் குறைந்தபட்ச கூலி மத்திய அரசை விட அதிகமாக வழங்கப்படுகிறது. மத்திய அரசு 104 ரூபாய்தான் கொடுக் கிறது. ஆனால் மாநில அரசோ குறைந்த பட்ச ஊதியமாக 135 ரூபாயும் அதிகபட்ச மாக 335 ரூபாயும் கொடுக்கிறது. அ.சவுந்தரராசன்: காவல்நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் துப்புரவு பணி செய்யக்கூடியவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கூட வழங்கப்படவில்லை. இன் கோசர்வ் மற்றும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் 18 ஆண்டுகளுக்கு முன்பு தான் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. இப்போதும் அவர்கள் 108 ரூபாய் 110 ரூபாய் என்ற நிலையில் தான் உள்ளனர். அதை மாற்றி அமைத்துத் தரவேண்டும்.அமைச்சர் செல்லபாண்டியன்: உறுப் பினர் கோரிக்கையை ஆய்வு செய்து முதல மைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கும். அ.சவுந்தரராசன்: குறைந்தபட்ச ஊதியம் மாதம் 10ஆயிரம் என்று அரசு அறிவிப்பு வெளியிடவேண்டும். முதலில் அரசு தனது துறைகளில் அமல்படுத்தி னால் முதலாளிகளுக்கு முக்கிய நிபந்தனை யாக அமையும். அங்கன்வாடி, சத்துணவு, டாஸ்மாக் ஆகியவற்றில் தொகுப்பூதியம், மதிப்பூதியம் சிறப்பூதிய முறைகள் கைவிடப் பட்டு அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படவேண்டும். இவர்களுக்கு ஒய்வூதியமும் வழங்கவேண்டும்.ஒப்பந்த முறை ஒரு புற்றுநோய்போல பரவிக்கொண்டிருக்கிறது. நிரந்த தன்மை யுள்ள தொழில்களில் ஒப்பந்த முறை ஒழிக்கப்படவேண்டும். சமவேலைக்கு சமஊதியம் வழங்கவேண்டும். அதை அமல் படுத்தவேண்டும். நல்ல லாபமீட்டும் தமிழ்நாடு காகித ஆலை போன்ற அரசு நிறுவனங்களிலேயே 25ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த தொழிலாளிகள் நிரந்தர தன்மையுள்ள தொழில்களில் உள்ளனர். பஞ்சாலைகளில் கேம்ப் கூலிகள் சுமங்கலித் திட்டம் என்பதை பெயர்மாற்றி இப்போதும் செயல்படுத்திக்கொண்டி ருக்கிறார்கள். அரசு இதில் தலையிட்டு விரைவாக நடவடிக்கை எடுக்கவேண் டும். பத்துவிழுக்காட்டிற்கு மேல் பயிற்சி தொழிலாளர்களை எந்த நிறுவனத்திலும் வைக்கக்கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும்.அமைச்சர் செல்லபாண்டியன்: பஞ்சாலைத் தொழிலில் கேம்ப் கூலி என்ற முறை எங்கும் இல்லை. அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ஒழிக்கப்பட்டு விட்டது. எங்கேயாவது இருக்கிறது என்று உறுப்பினர் ஆதாரத்துடன் சொன்னால் அந்த நிறுவனத்தின்மீது அரசு நடவ டிக்கை எடுக்கும். அ.சவுந்தரராசன்: அவர்களின் பெய ரைமாற்றி பயிற்சியாளர்கள் என்ற பெயரில் தொடர்ந்து வேலைவாங்கப்படுகிறார்கள். இது குறித்து தொழிற்சாலை ஆய்வாளர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.கடந்த இரண்டாண்டுகளாக நலவாரி யங்களில் முத்தரப்பு குழுக்கள் அமைக்கப் படாமல் உள்ளது. தொழிற்சங்கங்களோடு கலந்து ஆலோசனை செய்யாமலேயே தனிச்சையாக புதிய விதிகளை அதிகாரி கள் திணித்துக்கொண்டிருக்கிறார்கள்.அமைச்சர் செல்லபாண்டியன்: கடந்த கால திமுக ஆட்சியில் நலவாரி யங்கள் சீர்கெட்டுக்கிடந்தன. அதிமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் நலவாரியங் கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. கூடிய விரைவில் முதல்வர் கவனத் திற்கு கொண்டு சென்று முத்தரப்பு குழுக் கள் அமைக்கப்படும். அ.சவுந்தரராசன்: நலவாரிய அலுவ லகங்கள் வட்ட அளவில் ஏற்படுத்த வேண்டும். இப்போது 80 கிலே மீட்டர் அளவுக்கு தொழிலாளர்கள் பயணம் செய்ய வேண்டியுள்ளது. வட்ட அளவில் அமைத் தால் இதை தவிர்க்கமுடியும். அடையாள அட்டைகள் கொடுக்கும் போது ஒரு முறை மட்டும் தொழிலாளி நேரில் அலுவ லகத்திற்கு வரவேண்டும் என்று தொழிலா ளர் நலவாரியத்தில் அமைச்சர் முன்பு எடுத்த முடிவை அதிகாரிகள் மதிக்க வில்லை. இப்போதும் பலமுறை இழுத் தடிக்கப்படுகிறார்கள். அமைச்சர் செல்லபாண்டியன்: அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு கண்டிப்பாக ஒரு முறை வரவேண்டும் என் பது விதி. அந்த அடிப்படையில் கடந்த காலத்தில் நீதிபதி தீர்ப்பு கூட அவ்வாறு தான் இருந்தது. எனவே ஒருமுறை தொழி லாளி கண்டிப்பாக வரவேண்டும். அப்படி எங்கேயாவது பல முறை வரச் சொல் கிறார்கள் என்றால் அதை உடனடியாக அரசு சீர்படுத்தும்.அ.சவுந்தரராசன்: அங்கீகரிக்கப் பட்ட மத்திய தொழிற்சங்கங்கள் மூலம் உதவிகள் வழங்குவதை இப்போதும் மறுத்துக்கொண்டிருக்கிறார்கள். தொழிற்சங்கத்தை சிறுமைப்படுத்துகிறார் கள். தனிநபர்களோடு கைகோர்த்துக் கொண்டு 1.30மணிக்கு மேல் சிறப்பு அலு வலகங்கள் நடைபெறுகின்றன. விஏஓ மூலமாக சான்றளிப்பதை கைவிடவேண் டும். இதை தொழிலாளர் துறையே மேற் கொள்ளவேண்டும்.அமைச்சர் செல்லபாண்டியன்: ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட வாரியத் தில் பதிவு செய்வதை தடுக்க கிராம நிர் வாக அலுவலர்கள் வாயிலாக ஆய்வு செய்யப்படுகிறது. இதற்கான தொழிலாளர் துறை அரசாணை கடந்த ஆட்சியில் பிறப் பிக்கப்பட்டது. ஆனால் அதையே இன்று குற்றமாக சொல்லி திமுக தலைவர் கரு ணாநிதி இன்று பத்திரிகைகளில் எழுதி வருகிறார். இந்த அரசாணை குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். அ. சவுந்தரராசன்: திமுக ஆட்சியில் தான் இந்த அரசாணை கொண்டுவரப்பட் டது என்பதும் உண்மை. அப்போது அதை எதிர்த்து சிஐடியு ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கங்கள் போராடியதும் உண்மை. எனவே தான் இந்த பிரச்சனையை முதல் வர் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். அதில் சில மாற்றங்களை செய்தால் உதவி யாக இருக்கும். வாரியத்தின் சார்பில் வழங்கப்படுகின்ற ரூ.5 ஆயிரத்திற்கு மேல் உள்ள தொகைகள் வங்கி மூலமாகத்தான் வழங்கப்படும் என்று சொல்லக்கூடாது. நேரடியாக வழங்குவதை இன்னும் சில ஆண்டுகள் நீடிக்கவேண்டும்.அமைச்சர் செல்லபாண்டியன்: கடந்த கால திமுக ஆட்சியில் கிராஸ் செய்து காசோலையாக கொடுத்தார்கள். அப்படி கொடுத்தாலே வங்கி கணக்கு மூலமாகத் தான் பெறவேண்டும். அரசின் பணம் சாதாரண தொழிலாளிக்கு போய் சேர வேண்டும் என்பதால் தான் அவர்கள் பெயரி லேயே கணக்கு தொடங்கப்பட்டு அதில் செலுத்தப்படுகிறது. கேட்பு மனு கொடுக்கப் பட்ட உடனே அவர்கள் பெயரில் பணம் போடப்படுகிறது. 6மாவட்டங்களில் இந்த முறை சிறப்பாக நடைபெற்றுக்கொண்டி ருக்கிறது.முதலமைச்சர் ஜெயலலிதா: எந்த தொகையாக இருந்தாலும் பயனாளி களுக்கு வங்கி மூலமாக அனுப்பினால் தான் நிச்சயமாக அந்த பயனாளிகளுக்கு போய்சேருகிறது என்பதை உறுதி செய்ய முடியும். உதாரணத்திற்கு அரசு செலுத்தும் முதியோர் உதவித்தொகை இப்போது ஒவ்வொறு பயனாளிக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம். முன்பு இந்ததொகை யில் பெரும்பாலும் பயனாளிகளுக்கு போய்ச் சேரவில்லை. பெரும்பாலான முதியவர்கள் எழுதபடிக்கத்தெரியாதவர் கள். அவர்களுக்கு ஆதரவாக யாரும் இல்லை. யாரோ ஒருவர் கையெழுத்திட்டு அந்த பணத்தை பெற்றுக்கொண்டுவிடு வார்கள். இதனால் அந்த பணம் பயனாளி களுக்கு போய் சேராது.எனவே தான் இந்த முறை அதிமுக ஆட்சிக்குவந்தவுடன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்று சேருவதை உறுதிப்படுத்த அவர் களது வங்கிக்கணக்கிலேயே செலுத்தும் முறை கொண்டுவரப்பட்டது. எந்த உதவித் தொகையாக இருந்தாலும் வங்கிகள் மூலமாகத்தான் வழங்கவேண்டும் என்ற முறையால் நிச்சயம் அந்த பணம் போய்ச் சேருகிறது. எனவே வங்கிகள் மூலம் வழங்குவதை யாரும் ஆட்சேபிக்கக்கூடாது.பாலபாரதி: வங்கியின் மூலம்தான் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவித் தொகைகள் வழங்கப்படவேண்டும் என்ற முதல்வரின் நோக்கம் நல்ல நோக்கம். முறைகேடுகள் நடக்காது. ஆனால் வறு மைக்கு உட்பட்ட சாதாரண மக்கள் வங் கிக்கு சென்றால் அங்குள்ளவர்கள் போங்க போங்க என்று விரட்டுகிறார்கள். அத னால் அந்த தொகையை பெற தொடர்ந்து நடக்கவேண்டியுள்ளது. எனவே வங்கி களில் வரும் பணத்தை அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலமாக அவர்களது வீட் டிற்கே வழங்க நடவடிக்கை எடுக்கவேண் டும். வயதானவர்கள் சென்று வாங்குவ தில் சிரமம் உள்ளதே தவிர வங்கிகள் மூலம் வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை. அமைச்சர் செல்லபாண்டியன்: பய னாளிகளுக்கு போய்ச்சேரவேண்டும் என்பதற்காகத்தான் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டது. வங்கிகளை பொறுத்த வரை இந்த கணக்கு தொடங்கப்படுவதை வரவேற்கிறார்கள். ஒரு சில இடங்களில் மட்டும் வேண்டாம் என்று சொன்னாலும் பல இடங்களில் இதை வங்கிகளே வர வேற்கின்றன.அ.சவுந்தரராசன்: யார் கேட்பு மனு வில் பணம் கேட்டு விண்ணப்பம் செய்கிறார் களோ அவர்கள் வங்கிக் கணக்கில் கொடுப்பதை வரவேற்கிறோம். ஆனால் உறுப்பினராக பதிவு செய்வதற்கே வங்கிக் கணக்கு தொடங்கவேண்டும் என்று சொல்வதால் பதிவு செய்வதே குறைந்து போகிறது. பணப்பயன் கேட்டு வருபவர் கள் ஒரு லட்சம்பேர். அந்த ஒருலட்சம் பேர் வங்கிக்கணக்கு தொடங்கவேண்டும் என்று வேண்டுமானால் கட்டாயப்படுத்த லாம். ஆனால் பதிவு செய்யவே வங்கி கணக்கு இருக்கவேண்டும் என்று நிபந் தனைபோடுவது சரியல்ல.அமைச்சர் செல்லபாண்டியன்: அதி முக அரசு பொறுப்பேற்றவுடன் தொழிலா ளர் நலவாரிய உறுப்பினர் பதிவை பொறுத்த வரை எந்த மாவட்டத்திலும் நிலுவை இல்லை. எல்லாரும் உடனடியாக பதிவு செய்யப்படுகிறார்கள். கடந்த திமுக ஆட்சியில் 2லட்சத்து 50ஆயிரம் கேட்பு மனுக்கள் நிலுவையில் இருந்தன. அதி முக அரசு பொறுப்பேற்றபின்னர் அந்த மனுக்களையும் சேர்த்து உதவித்தொகை கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது 52 ஆயிரம் கேட்பு மனுக்கள் தான் நிலுவை யில் உள்ளன. இன்னும் 3மாதங்களுக்குள் அந்த மனுக்களுக்கும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிடும்.அ. சவுந்தரராசன்: தொழிலாளர் நீதி மன்றங்களின் எண்ணிக்கை அதிகப் படுத்த வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு மாவட்டங்களுக்கு ஒன்று அமைக்கப்பட வேண்டும். மறைமலை நகரில் ஈஎஸ்ஐ மருத்துவமனையை உயர் சிகிக்சை மருத்து வமனையாக மாற்றவேண்டும். பெரம்பலூ ரில் ஒரு ஈஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க வேண்டும்.விடுமுறைகளுக்கு அங்கேயே அனுமதி வழங்கும் ஏற்பாட்டை செய்ய வேண்டும். அமைச்சர் செல்லபாண்டியன்: உறுப்பினர் கோரும் இடங்களில் 25ஆயிரத் திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருக் கும் பட்சத்தில் கண்டிப்பாக அங்கு ஈஎஸ்ஐ மருத்துவமனைகள் அமைக்கப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

No comments:

Post a Comment