Showing posts with label NEWS. Show all posts
Showing posts with label NEWS. Show all posts

Wednesday, 21 May 2014

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் ஆர்.உமாநாத் மறைவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், தமிழக தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடியும், இந்திய இடதுசாரி இயக்கத்தின் இணையற்ற தலைவர்களில் ஒருவருமான தோழர்.
ஆர்.உமாநாத் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கு தோழர் ஆர்.உமாநாத் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
உடல்நலக்குறைவு காரணமாக திருச்சியில் தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் 21.5.2014 (புதன்) காலை 7.15 மணிக்கு இயற்கை எய்தினார்.

Tuesday, 8 April 2014

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 16வது மக்களவைத் தேர்தல், 2014 தேர்தல் அறிக்கை

பகுதி 1
முன்னுரை
இந்திய நாட்டு மக்கள் 16வது மக்களவைக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வாக்குச் சாவடிகளுக்குச் செல்லவிருக்கிறார்கள். பல்வேறு தரப்பிலிருந்தும் நாடாளுமன்ற ஜனநாயகம் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்ற நிலையில் தான் இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியலில் நிலவும் பெரும் பணநாயகத்தின் வலிமையானது தொடர்ந்து ஜனநாயகத்தின் வலுவை சீர்குலைத்து வருகிறது. பொதுவாழ்விலும் அரசின் உயர்மட்டத்திலும் புரையோடிப் போயுள்ள கட்டுக்கடங்காத ஊழலானது ஜனநாயக அமைப்பின் உயிர்நிலைகளை சீழ்பிடிக்கச் செய்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பின்பற்றி வந்த புதிய தாராளவாதக் கொள்கைகள் நாடாளுமன்றத்தைத் தரமிழக்கச் செய்துள்ளதோடு பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள், அந்நிய நிதி நிறுவனங்கள், இவற்றிற்கு அடிபணிந்து நடக்கும் ஆளும் அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரின் கூட்டணியின் முடிவுகளுக்கு இணங்கவே அரசின் கொள்கைகள் தீர்மானிக்கப்படும் நிலைக்கும் அது தள்ளப்பட்டுள்ளது.

Sunday, 6 April 2014

இ.பி.எப்., கணக்கில் மாற்றம் செய்ய மத்திய அரசு மறுப்பு

துடில்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் (இ.பி.எப்.,) சந்தா தொகையில், உறுப்பினர்களின் அடிப்படை ஊதியத்துடன், சலுகைப் படியை சேர்க்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க, மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தில் இருந்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்திற்கு கடிதம் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன், இதர சலுகைப்படிகளையும் சேர்த்து கணக்கிட்டு, அதன் அடிப்படையில், வருங்கால வைப்பு நிதியை பிடித்தம் செய்தால், நிறுவனங்களுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படும். அதே சமயம், ஊழியர்களின் வைப்பு நிதி கணக்கில், சேமிப்பு அதிகரிக்கும். இத்திட்டத்திற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது என்பது, ஐந்து கோடி உறுப்பினர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

Saturday, 5 April 2014

இரண்டாவது சனி விடுமுறையில் முரண்பாடு: மின்கழகத்தில் நீடிக்கும் வினோத நடைமுறை

தமிழக மின்கழகத்தில், இரண்டாவது சனிக்கிழமை குறிப்பிட்ட பதவிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமே விடுப்பு, இதர ஊழியர்களுக்கு பணி என்ற வினோத நடைமுறை, 25 ஆண்டுக்கு மேலாக நீடிப்பது, ஊழியர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக மின்வாரியத்தின், மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின்செலுத்துகை கழகத்தில் பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், உதவியாளர், கணக்கீட்டாளர், எழுத்தர் உட்பட, 80ஆயிரம் ஊழியர் பணிபுரிகின்றனர். இதில், வினியோக வட்ட அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை விடப்படுகிறது. மின் உற்பத்தி பிரிவுகளில் பணிபுரியும் உதவி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், உதவியாளர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு, இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை கிடையாது. இந்த முரண்பாடு, 25 ஆண்டுக்கு மேலாக மின்வாரியத்தில் நீடிப்பது ஊழியர்களை குழப்பத்திலும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

Friday, 21 February 2014

தொடர் மின்வெட்டுக்கு காரணம் வருடத்துக்கு 8 லட்சம் மின் நுகர்வோர் அதிகரிப்பு ஆக்கபூர்வ திட்டம் இல்லாததால் மக்கள் அவதி


தமிழகத்திற்கு 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால்  உற்பத்தியாவதோ 8 ஆயிரம்  மெகாவாட் மின்சாரம்தான். 4 ஆயிரம் மெகாவாட்  மின்சாரத்தை சரிகட்ட தனியார், வெளிமாநிலங்களில்  இருந்து மின்சாரம் பெறப்பட்டு  வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 669 துணை மின்நிலையங்கள் உள் ளன. இதில் 400  கே.வி துணை மின்நிலையம் 14ம், 230 கே.வி துணை மின்நிலையம் 75ம், 110  கே.வி  துணை மின்நிலையம் 580ம் உள்ளன.  காற்றாலை, அனல்மின்நிலையம்,  நீர்மின்நிலையம், அணுமின்நிலையம் மூலம் தமிழகத்தில் மின்உற்பத்தி  செய்யப்பட்டு  வருகிறது. தமிழகத்தில் உள்ள வடசென்னை, எண்ணூர், மேட்டூர், தூத்துக்குடி, நெய்வேலி   அனல்மின்நிலையங்கள் 5710 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டவை.  கூடங்குளம், கல்பாக்கம்  அணுமின்நிலையம் மொத்தம் 1440 மெகாவாட் உற்பத்தி திறன்  கொண்டவை. மேட்டூர், அமராவதி,  நீலகிரி, காட்டேறி, குண்டா, மோயாறு, பாபநாசம்,  வைகை, முல்லைப்பெரியார், கோதையாறு ஆகிய  நீர்மின்நிலையங்கள் சுமார் 1693  மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டவை, குமரி, நெல்லை, தூத்துக்குடி,  கோவை,  திருப்பூர் மாவட்டங்களில் உள்ள காற்றாலைகளில் மொத்தம் சுமார் 4 ஆயிரம் மெகாவாட்  மின்  உற்பத்தி திறன் கொண்டவை. 

Monday, 20 January 2014

அரசு வங்கிகளைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகள் ! ( வினவு )

மொத்தக் கடன் தொகையில் 50% இந்த தனியார் கார்ப்பரேட் முதலாளிகளால் சூறையாடி தீர்க்கப்பட்டிருக்கின்றன.


ந்தியாவின் 100 முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் அடுத்த 15 மாதங்களில் ரூ 2.1 லட்சம் கோடி மதிப்பிலான வங்கிக் கடன்களை புதுப்பிக்க உள்ளன. அதாவது, அடுத்த 15 மாதங்களில் இந்நிறுவனங்கள் கட்ட வேண்டிய கடன்களின் காலக் கெடு முடிவுக்கு வருகின்றது, அந்தக் கடன்களுக்கு மாற்றாக புதிய கடன்களை வங்கிகள் கொடுக்கப் போகின்றன. காலாவதியாகப் போகின்ற இந்த கடன்களின் மதிப்பு 2013-ம் ஆண்டின் இறுதியில் இந்திய வங்கிகளின் நிகர மதிப்பில் 29 சதவீதம் ஆகும். இந்தத் தகவல்கள் ஃபிட்ச் குழுமத்தைச் சேர்ந்த இந்தியா ரேட்டிங்ஸ் & ரிசர்ச் என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.