
தீக்கதிர் செய்தி நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டமும் - உச்சநீதிமன்ற தீர்ப்பும் ஜி. சுகுமாறன் ------------------- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றும் 10632 க்கும் மேற்பட்ட ஒப் பந்தத் தொழிலாளர்களை சீனியாரிட்டி அடிப் படையில் பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்கிற உச்ச நீதிமன்ற தீர்ப்பு நெய்வேலி ஒப் பந்த தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளது. பெரும் நம்பிக்கையுடன் உள் ளனர். இந்நிலையில் தீர்ப்பின் அம்சங்க ளையும், கடந்த கால போராட்டங்களையும் நினைவு கூருவது அவசியம்.1989-ல் என்.எல்.சி. நிறுவனத்தில் பேச்சுவார்த்தையில் இருந்த ஐந்து சங்கங் களும் தொழிலாளர்களுக்கு துரோக ஒப்பந் தத்தை போட முயற்சித்தனர். அன்றைய தினம் சிஐடியு, எச்.எம்.எஸ் இரண்டு சங் கங்கள் எங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என தொடர் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

