Thursday, 2 April 2015

லஞ்சம் தராவிட்டால் ஒரு பைலும் அசையாது ( தீக்கதிர் செய்தி )


ஷாக் அடிக்க வைக்கும் மின்துறை அமைச்சகம்

லஞ்ச ஊழல் பெருத்துவிட்டது, கோடி கோடியாய் மக்கள் சொத்தை கொள்ளையடித்து குடும்பச் சொத்தாக மாற்றினார்கள் என்று முந்தைய அரசை பார்த்து கூப்பாடு போட்டு ஆட்சியில் அமர்ந்த அதிமுக... மின்துறை அமைச்சரின் அதிகார அத்துமீறலும் வானளாவிய வசூல் வேட்டையும் கண்டால் இந்த நாடே அதிர்ந்து போகும்... மக்களின் குறைகளைக் கேட்க வேண்டிய அரசிடம் குறைகளோடு பணத்தையும் கட்டுக்கட்டாக கொடுக்கவேண்டும். அப்போது தான் குறைகள் ஓரளவாவது களையப்படும்.
மின்வாரியத்தில் ரூ.93,000 கோடி நட்டம் என்று சொல்லப்படுகிறது. இந்த நட்டம் யாரால் ஏற்பட்டது என்று தலைமை தணிக்கை அதிகாரி (ஊஹழு) தணிக்கை செய்தால் நிச்சயம் பல பெரிய புள்ளிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். இது தோண்டத் தோண்ட ஊழல் சுரங்கம் போல் ஊழல் வந்து கொண்டே இருக்கும். எ ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து தலைமைப் பொறியாளர் பதவியை வாங்கும் நிலைஎ பல லட்சம் ரூபாய் கொடுத்து மேற்பார்வை பொறியாளர் மாறும் நிலைஎ மின் வாரியத்தில் பதவி உயர்வுகளில் வாரிய விதிமுறைகள் கிடையாது.
மந்திரி சிபாரிசுக் கடிதம் இல்லாமல் எதுவும் நடக்காது. வாரிய அதிகாரிகளோ பொம்மைகளாக ஆட்டிப்படைக்கின்றார்கள். வாரியத்தின் 8, 9, 10 வது தளங்களில் மந்திரி சிபாரிசுக் கடிதங்கள் இல்லாத கோப்புகளே கிடையாது. இதற்காக நிரந்தரமான அரசியல் தரகர்கள் அமைச்சகத்தால் ‘நியமிக்கப்படுகிறார்கள்’. அதிகாரிகள் வாரம் இரண்டு முறை அமைச்சரின் நேரடி ஒப்புதலை பெற வேண்டி இருக்கின்றது. இது என்ன மின்வாரியமா அல்லது அமைச்சரின் கம்பெனியா என்று கேட்கும் அளவுக்கு நாற்றமடிக்கிறது வாரியம்... மின்துறை அமைச்சரின் வசூல் வேட்டை இத்தோடு நிற்க வில்லையாம்.
எ குறிப்பிட்ட வணிக வளாகங்கள், 50 வீடுகள் உள்ள தொகுப்பு வீடுகள், அனைத்திற்கும் மின் இணைப்பு வழங்க வேண்டுமானால் அமைச்சரின் ஒப்புதல் தேவை. அவரின் கடைக்கண் பார்வை விழ வேண்டும். அவருக்கு உரிய பங்கு சேர வேண்டும். இவைகள் நடந்தால்தான் சாதாரண மின் இணைப்பு கிடைக்குமாம்.எ தாம்பரம் நியூ காலனி பிரிவில் 250 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி கட்டிடம் புதியதாக கட்டப்பட்டுள்ளதாம், குடியிருப்புகள் கட்டிமுடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் மின் இணைப்பு கிடைக்கவில்லையாம்,
மின் இணைப்புக் கோரி வாரியத் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் சென்றால் கோட்டைக்குச் செல் என்று உத்தரவாம். கடந்த பல மாதங்களாக மின் விளக்குகள் ஏந்தி மின் வாரியத்திலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் உள்பட காடா விளக்கில் வாழ்க்கையை நடத்துகிறார்களாம்.எ குரோம்பேட்டை, சோழவரம் நகர் எம்.ஜி.ஆர். தெருவில் உள்ள நவரத்னா அப்பார்ட்மெண்ட்ஸ் விண்ணப்பம் அளித்து 6 மாதம் ஆகியும் மின் இணைப்பு வழங்கவில்லை. காரணம் அமைச்சர் அலுவலகம் அனுமதி வழங்கவில்லையாம். வீடு கட்டிய ஞசடிஅடிவடிசள வாரியத் தலைவரை சந்தித்த பிறகும் பயன் இல்லையாம். அமைச்சர் தலையீடு என்றதும் வாரியத் தலைவர் வாய்மூடி மௌனமானார்.சென்ற ஆட்சி சரியில்லை என்று இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னால் லஞ்சமும், ஊழலும் வழக்கம் போல பேயாட்டம் ஆடுகின்றது. மாநில னுஏஹஊ துறை விசாரிக்குமா? முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?- நமது சிறப்பு நிருபர்

Monday, 16 March 2015

மின் ஊழியர்களுக்கான புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும் திருப்பூர் கிளை மாநாட்டில் தீர்மானம்

திருப்பூர்,
மின் ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதை கைவிட வேண்டும் என்று திருப்பூர் கிளை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
திருப்பூர் கிளை மாநாடு
logo
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திருப்பூர் கிளை மாநாடு திருப்பூர் சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. மாநாட்டுக்கு திருப்பூர் கிளை தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். கோவை மண்டல தலைவர் மதுசூதனன் தொடங்கி வைத்து பேசினார். திருப்பூர் கிளை செயலாளர் கோபாலகிருஷ்ணன் செயலாளர் அறிக்கையை வாசித்தார். வரவு–செலவு அறிக்கையை பொருளாளர் ராமலிங்கம் படித்தார்.
பொறியாளர் அமைப்பின் பொதுச்செயலாளர் அருட்செல்வன், ஓய்வு பெற்றோர் நல அலுவலர் சங்கத்தின் அச்சுதன், சி.ஐ.டி.யு. திருப்பூர் மாவட்ட செயலாளர் சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் கோரிக்கைகள் குறித்து பேசினார். முடிவில் அவினாசி செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
புதிய பென்சன் திட்டம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
மின் உற்பத்தி திட்ட பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். மின்சார சட்டம் 2003–ல் திருத்தம் கொண்டு வர வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதை கைவிட வேண்டும். புதிய அலுவலகங்களில் அனைத்து பிரிவுகளுக்கும் பகுதி நேர பணியாளர்களை நியமிக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் திருப்பூர், அவினாசி, காங்கயம், பல்லடம், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த அனைத்து மின் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.



Friday, 26 September 2014

தனியாரிடமிருந்து கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்தினாலே போதும் கட்டண உயர்வுக்கு தேவை இருக்காது: கே.விஜயன்

திருவள்ளூர், செப். 25 -
தமிழக அரசு தனியார் அனல் மின்நிலையங்களில் இருந்து கூடுதல்விலை கொடுத்து மின்சாரம் வாங் குவதை நிறுத்தினாலே கட்டண உயர்வுக்கு தேவை இருக்காது என்று மின் ஊழியர் மத்திய அமைப் பின் முன்னாள் தலைவர் கே.விஜயன் கூறினார்.இதுகுறித்து அவர் கூறியது வருமாறு: தமிழக மின் வாரியத் திற்கு 6805 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் வகையில் மின் கட்டணத்தை 15முதல் 17 சதவிகிதம் வரை உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதனால் ஏழை நடுத்தர மக்களுக்கு பாதிப்பு ஏற் படாது என தமிழக முதல் வர் ஜெயலலிதா தெரிவித் துள்ளார். எனினும் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் நடுத்தர மக்கள் இந்த மின் கட்டண உயர்வால் பாதிப்புக்கு உள் ளாகும் அபாயம் உள்ளது.
இந்த மின்கட்டண உயர் விற்கு காரணம் மத்திய அரசு ரயில் கட்டணத்தை உயர்த்தியதால் வெளிமாநி லங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் நிலக் கரி இறக்குமதி செய்வதற்கு கூடுதலாக செலவாகிறது. இதனை சரிகட்ட கட்ட ணத்தை உயர்த்தும் மின்வா ரியம் தனியார் அனல்மின் நிலையங்களில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் 12 ரூபாய் கொடுத்து வாங்குவதை மறு பரிசீலனை செய்திருந்தாலே தற்போது மின் கட்ட ணத்தை உயர்த்தும் நிலை ஏற்பட்டிருக்காது என பல் வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து உள்ளனர். எனவே மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.