தமிழகத்திற்கு 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் உற்பத்தியாவதோ 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்தான். 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை சரிகட்ட தனியார், வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 669 துணை மின்நிலையங்கள் உள் ளன. இதில் 400 கே.வி துணை மின்நிலையம் 14ம், 230 கே.வி துணை மின்நிலையம் 75ம், 110 கே.வி துணை மின்நிலையம் 580ம் உள்ளன. காற்றாலை, அனல்மின்நிலையம், நீர்மின்நிலையம், அணுமின்நிலையம் மூலம் தமிழகத்தில் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள வடசென்னை, எண்ணூர், மேட்டூர், தூத்துக்குடி, நெய்வேலி அனல்மின்நிலையங்கள் 5710 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டவை. கூடங்குளம், கல்பாக்கம் அணுமின்நிலையம் மொத்தம் 1440 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டவை. மேட்டூர், அமராவதி, நீலகிரி, காட்டேறி, குண்டா, மோயாறு, பாபநாசம், வைகை, முல்லைப்பெரியார், கோதையாறு ஆகிய நீர்மின்நிலையங்கள் சுமார் 1693 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டவை, குமரி, நெல்லை, தூத்துக்குடி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள காற்றாலைகளில் மொத்தம் சுமார் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டவை.
Friday, 21 February 2014
Saturday, 1 February 2014
COTEE Wage revision Donation Letter copy
TAMIL NADU GENERATION AND DISTRIBUTION
CORPORATION LIMITED
SECRETARIAT
BRANCH,
N.P.K.R.R. MAALIGAI,
144, ANNA
SALAI,
CHENNAI – 2.
Memorandum
No.3993/ A3 / A31 /14 –1, Dated : 31-1-2014.
Sub: TANGEDCO - Contribution of donation to Trade
Union - Deduction of
donation from the salary of
the
willing Members of Central Organisation of
Tamil Nadu
Electricity Employees - Orders -
Issued.
Monday, 20 January 2014
அரசு வங்கிகளைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகள் ! ( வினவு )
மொத்தக் கடன் தொகையில் 50% இந்த தனியார் கார்ப்பரேட் முதலாளிகளால் சூறையாடி தீர்க்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவின் 100 முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் அடுத்த 15 மாதங்களில் ரூ 2.1 லட்சம் கோடி மதிப்பிலான வங்கிக் கடன்களை புதுப்பிக்க உள்ளன. அதாவது, அடுத்த 15 மாதங்களில் இந்நிறுவனங்கள் கட்ட வேண்டிய கடன்களின் காலக் கெடு முடிவுக்கு வருகின்றது, அந்தக் கடன்களுக்கு மாற்றாக புதிய கடன்களை வங்கிகள் கொடுக்கப் போகின்றன. காலாவதியாகப் போகின்ற இந்த கடன்களின் மதிப்பு 2013-ம் ஆண்டின் இறுதியில் இந்திய வங்கிகளின் நிகர மதிப்பில் 29 சதவீதம் ஆகும். இந்தத் தகவல்கள் ஃபிட்ச் குழுமத்தைச் சேர்ந்த இந்தியா ரேட்டிங்ஸ் & ரிசர்ச் என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
Thursday, 2 January 2014
ஓய்வூதிய பாதுகாப்புக்கு வேட்டு
காங்கிரஸ் - பாஜக கைகோர்ப்பு
ஓய்வூதியத்தை ஒழுங்குபடுத்தி வளர்க்கும் ஆணைய மசோதா (ஞகுசுனுஹ க்ஷடைட) செப்டம்பர் 4ம் தேதி மக்களவையிலும் 6ம்தேதி மாநிலங்களவையிலும் நிறைவேறியது. செப்டம்பர் 18ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி செப்டம்பர் 19ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது.
இந்த சட்டம் பாஜகவினால் 1.1.2004 முதல் அமல்படுத்தப்பட்ட சட்ட விரோதமான புதிய பென்சன் திட்டத்தை அந்த தேதியிலிருந்தே சட்டப்படியானதாக்குகிறது. சட்ட விரோத ஆணையத்தை சட்டப்படையானதாக்குகிறது என்று ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் கூறினார்.இந்த சட்டப்படி புதிய பென்சன் திட்டத்தில் வருபவர்களுக்கு ஓய்வூதியம் பங்குச் சந்தையின் லாப நஷ்டத்தை பொருத்தது. லாபத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று சட்டமே கூறுகிறது. குறைந்தபட்ச ஓய்வூதிய உத்தரவாதமும் இல்லை. குடும்ப ஓய்வூதியமும் கிடையாது. அதுமட்டுமல்ல 1972 பணிக்கொடை சட்டத்தின்படி கூட பணிக்கொடை கிடையாது.
ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு : மின் ஊழியர் மத்திய அமைப்பு வருத்தம்
சென்னை, ஜன. 1 -
மின் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த முதல்வரின் அறிவிப்பு வருத்தமும், அதிர்ச்சியும் அளிப்பதாக உள்ளது என்று மின் ஊழியர் மத்திய அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.எஸ். சுப்பிரமணியன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், மின்வாரிய ஊழியர்களுக்கு 1.12.2011 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் புத னன்று (ஜன.1) வெளியிட்டுள்ளார். அதன்முழு விவரங்களையும் பரிசீலித்த பின்னரே சாதக, பாதக அம்சங்கள் குறித்து கூற முடியும்.இருப்பினும், ஊதிய உயர்வு சம்பந்த மான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக 14.11.2013 அன்று வாரிய தரப்பின் ஆலோசனை முன் வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்ட தொழிற் சங்கங்கள் வாரியத்தின் ஆலோசனை மீது கருத்துக்களை கூறின. இதன் மீது வாரியம் மற்றும் அரசின் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோதே, தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கையை இறுதிப்படுத்தி அரசு அறிவிப்பதற்கு முன்னர், முதலமைச்சரோ, மின் துறை அமைச்சரோ தொழிற் சங்கங்களுடன் இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இதை அறிவித்திருக்க வேண்டும் என மின் ஊழியர் மத்திய அமைப்பு கருதுகிறது.2005-ல் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை யின்போது இன்றைய முதலமைச்சர் தொழிற் சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே அறிவிப்பு வெளி யிட்ட மரபைக் கூட இம்முறை கடைப் பிடிக்கவில்லை என்பது மன வருத்தம் அளிக்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி தீக்கதிர்
Friday, 13 December 2013
பராமரிப்பு தனியாருக்கு விட திட்டம் மேட்டூர் தெர்மல் ஊழியர்கள் கலக்கம்
மேட்டூர் தெர்மல் கன்வேயர் பராமரிப்பு மற்றும் நிலக்கரி கையாளும் பகுதியை தனியாருக்கு டெண்டர் விட முடிவு செய்துள்ளதால், அப்பகுதியில் பணிபுரியும், 40 சதவீத ஊழியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேட்டூர் தெர்மலில் (அனல்மின் நிலையம்) ஒரு யூனிட்டில், 210 மெகாவாட் வீதம், நான்கு யூனிட்களில், 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக நாள் ஒன்றுக்கு, 14,000 டன் நிலக்கரி எரிக்கப்படுகிறது.
மேட்டூர் தெர்மலுக்கு தினமும் சராசரியாக, ஏழு சரக்கு ரயில்களில் நிலக்கரி வருகிறது. நிலக்கரி இறக்கும் பகுதி, நிலக்கரியை மின் உற்பத்திக்காக அனுப்பி வைக்கும் பிரைமரி கிரசர், செகன்ட்ரி கிரசர், லோக்கோ, ஸ்டேக்கர், ரீ கிளைமர், டிப்ளர்கள் உள்ளது.
கிரசரில் இருந்து பாய்லருக்கு நிலக்கரி எடுத்து செல்லும் கன்வேயர் பெல்ட் பகுதி மற்றும் நிலக்கரி கையாளுதல் பகுதியில் ஒரு கண்காணிப்பு பொறியாளர், இரு செயற்பொறியாளர், 80 உதவி மற்றும் இளநிலை பொறியாளர், ஹெல்பர், ஆபரேட்டர் உள்பட, 600 ஊழியர்கள் பணி புரிகின்றனர்.தெர்மலின் மொத்த ஊழியர்களில், 40 சதவீதம் பேர் இப்பகுதியில் வேலை செய்வது குறிப்பிடத்தக்கது. மேட்டூர் தெர்மலில், 2012 மே, 10ம் தேதி நடந்த தீ விபத்தில், 160 மீட்டர் நீளமுள்ள நிலக்கரி கன்வேயர் பெல்ட் எரிந்து சேதமானதால், 10 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டமும், 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டது.இதனால், நிலக்கரி கையாளுதல் மற்றும் கன்வேயர் பராமரிப்பு பணி அனைத்தையும் மொத்தமாக ஒரே தனியார் நிறுவனத்துக்கு, 100 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட மின்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் இம்மாத இறுதியில் நடக்க உள்ளது.இதற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து மேட்டூரில் மின்ஊழியர்கள் மத்தியில் நோட்டீஸ் வினியோகம் செய்கிறது. மேலும், கன்வேயர் பராமரிப்பு தனியாருக்கு விடுவது, தெர்மல் மின் ஊழியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த, 25 ஆண்டாக நிரந்தர ஊழியர்கள் வேலை செய்த மேட்டூர் தெர்மலின் பல்வேறு பிரிவுகளில், தற்போது ஒப்பந்த ஊழியர்கள் மூலம் இயக்கப்படுகிறது. ஒப்பந்த ஊழியர்களை நியமிப்பதிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.இந்நிலையில், மேட்டூர் தெர்மலில், 40 சதவீதம் ஊழியர்கள் பணிபுரியும் நிலக்கரி கையாளும் பகுதி, கன்வேயர் பெல்ட் பகுதியை தனியாருக்கு விட மின்கழகம் முடிவு செய்துள்ளது. இதனால், அப்பகுதியில் பணிபுரியும், 40 சதவீத ஊழியர்கள் வேறு தெர்மலுக்கு மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது.
ஒப்பந்த தொழிலாளர் நியமனத்தால் தெர்மலில் உள்ள, 40 சதவீத பணியிடங்கள் ரத்து செய்யவும் வாய்ப்புள்ளது. இதனால், மேட்டூர் தெர்மல் ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். எனவே, தெர்மல் கன்வேயர் பராமரிப்பை தனியாருக்கு விடும் முடிவை மின்கழகம் ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tuesday, 12 November 2013
Subscribe to:
Posts (Atom)